ads

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ

iruttu araiyil murattu kuthu movie mokka love lyrical video song

iruttu araiyil murattu kuthu movie mokka love lyrical video song

'ஹர ஹர மகாதேவகி' படத்தினை தொடர்ந்து  சந்தோஷ் பி.ஜெயகுமார் இரண்டாவது முறையாக கவுதம் கார்த்திக் நாயகனாக வைத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து'  படத்தினை இயக்கி வருகிறார். சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என இரு நாயகிகள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்ததினை தொடர்ந்து சென்னையில் மற்ற படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

மேலும் இப்படத்தினை இம்மாதம் இறுதியில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, ‘மீசையை முறுக்கு’ புகழ் ஷாரா மற்றும் சிலர் நடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த தினத்தில் நடிகர் ஆர்யா வெளியிட்ட போஸ்டர் அதற்கு அடுத்தபடியாக வெளிவந்த சிங்கிள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. நேற்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் பங்குபெற்றனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோ