ads

கொடிவீரனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள்

kodi veeran movie

kodi veeran movie

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் தயாரித்து நடித்து வரும் 'கொடிவீரன்' படத்தில் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா முதலானோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகையான அக்டோபர் 18ம் தேதி வெளிவருவதாக படக்குழுவினர் முதலில் தெரிவித்திருந்தனர். சில காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி இந்த மாதம் 30ம் தேதி வெளியிடுவதாக இருந்தது.  

இந்நிலையில் கொடிவீரன் படத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் சசிகுமாரின் உறவினரான (அத்தை மகன்) அசோக் குமார் கந்து வட்டி காரணத்தினால் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணத்தினால் மீண்டும் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் டிசம்பர் 7ம்  தேதிக்கு மாற்றி அமைத்துள்ளனர். 

முன்னதாகவே வெளிவந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர் போன்றவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கும் இந்நிலையில் படத்தின் வெளியீட்டை மாற்றியதால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. சொன்ன தேதியில் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்த சசிகுமார் கொடிவீரன் படத்தில் தேதியை மாற்றி கொண்டே இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

கொடிவீரனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள்