விக்ரமின் மஹாவீர் கர்ணா படத்திற்காக சபரிமலை ஐயப்பனை தரிசித்த இயக்குனர்

       பதிவு : Apr 11, 2018 16:26 IST    
இயக்குனர் ஆர்எஸ் விமல் மஹாவீர் கர்ணா படத்தின் கதையை முடித்த கையோடு ஐயப்பனை தரிசிக்க சென்றுள்ளார். இயக்குனர் ஆர்எஸ் விமல் மஹாவீர் கர்ணா படத்தின் கதையை முடித்த கையோடு ஐயப்பனை தரிசிக்க சென்றுள்ளார்.

'ஸ்கெட்ச்' படத்திற்கு பிறகு சீயான் விக்ரம், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும், இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதில் 'துருவ நட்சத்திரம்' படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே வருகிறது. தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பும் தள்ளி கொண்டே செல்கிறது. இதனை அடுத்து விக்ரம் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார்.

திரிஷாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம், 300 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகவுள்ள சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மலையாள இயக்குனரான ஆர்எஸ் விமல் இயக்க உள்ளார். இவர் முன்னதாக கடந்த 2015-இல் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த 'என்னு நின்டே மொய்தீன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

ரசிகர்கள் மத்தியிலும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை அமைப்பாளருக்கான ஆசியா நெட், பிலிம்பேர், 1st IIFA உற்சவம், ஆசியாவிசன் மற்றும் வனிதா பிலிம்ஸ் போன்ற விருதுகளை குவித்தது. இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆர்எஸ் விமல் நடிகர் விக்ரமை வைத்து சரித்திர படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தில் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் போர்க்கள வீரராக நடிக்க உள்ளதால், போர்க்கள வீரருக்கான் கம்பீர உடல் கட்டுக்கோப்பை அமைக்க தீவிர உடற்பயிற்சியை விக்ரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த படத்தை முதலில் மலையாளத்தில் மட்டும் உருவாக்க படக்குழு முடிவு செய்தது. ஆனால் சரித்திர படமான இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் இந்த படத்தின் கதையை நீண்ட நாட்களாக இயக்குனர் விமல் உருவாக்கி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன் பிறகு இயக்குனர் ஆர்எஸ் விமல் படத்தின் கதை முடிந்த கையோடு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு கேரளாவில் உள்ள சபரிமலா கோவிலுக்கு சென்றுள்ளார்.

 

அங்கு சென்று ஐயப்பனை தரிசித்து ஆசி பெற்று, கடவுள் அருளால் இந்த படத்தின் பணிகளை துவங்குகிறார். இந்த படத்திற்காக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழுவில் இணைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் நகரில் துவங்கவுள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ஐதராபாத் மற்றும் ஜோத்பூரில் படமாக்க உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு 2019இல் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.


விக்ரமின் மஹாவீர் கர்ணா படத்திற்காக சபரிமலை ஐயப்பனை தரிசித்த இயக்குனர்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்