ads

'மதுர வீரன்' சிங்கிள் ட்ராக்கை வெளியீடும் சமுத்திரக்கனி

samuthirakani release mathura veeran audio single track

samuthirakani release mathura veeran audio single track

இயக்குனர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மதுர வீரன்'. இந்த படத்தில் 'சகாப்தம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வி.ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அறிமுக நாயகி மீனாட்சி, மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து  நடிக்கின்றனர்.

இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை இயக்குனரே மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாக இருக்கிறது. 'என்னடா நடக்குது நாட்டுல' என்று தொடங்கும் அந்த பாடலை நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி வெளியிடுகிறார்.

'மதுர வீரன்' சிங்கிள் ட்ராக்கை வெளியீடும் சமுத்திரக்கனி