நிவினின் காயம்குளம் கொச்சுண்ணி படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்

       பதிவு : Feb 14, 2018 14:13 IST    
mohanlal joins nivin pauly film mohanlal joins nivin pauly film

'ரிச்சி' படத்தின் வெற்றியை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் வரலாற்று சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 19-ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இவர் செல்வந்தர்களிடம் பணம் பொருட்களை பறித்து சாதாரண மக்களுக்கு வழங்கி வருவார். இவரது வாழ்க்கையில் நடந்த பல சுவாரிஸ்யமான அதிரடி  நிகழ்ச்சிகளை கதையாக உருவாக்கி எடுத்து வரும் இப்படத்தில் கொச்சின்னியாக நிவின் பாலி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக எதிர் நீச்சல்' புகழ் பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.  

 'ஸ்ரீகோகுலம் மூவிஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கேரளா பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் முக்கிய வேடத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் இணைவதாக தகவல் முன்னதாகவே வெளிவந்திருந்தது. தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். இவரது வருகையை கேட் வெட்டி படக்குழு கொண்டாடி புகைப்படத்தியும் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை நிவின் பாலி அவரது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா கடந்த நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


நிவினின் காயம்குளம் கொச்சுண்ணி படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்