ads

நிமிர் படத்தின் எப்போதும் உன்மேல் நியாபகம் பாடல் டீசர்

udhayanidhi nimir new song release

udhayanidhi nimir new song release

இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படம் நிமிர். இந்த படம் மலையாள முன்னணி  நடிகர் பகத் பாசில் நடிப்பில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் கடந்த 2016ல் வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தின் ரிமேக் ஆகும். நிமிர் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மலையாள நடிகை நமீதா பிரமோத் நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக  மலையாளத்தில் அனுஸ்ரீ நடித்த வேடத்தில், பார்வதி நாயர் நடித்து வருகிறார். இவர் இப்படத்தில் உதயநிதியின் முன்னாள் காதலியாக வளம் வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, இயக்குனர் மகேந்திரன், எம் எஸ் பாஸ்கர், கருணாகரன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.    

இது வரை உதயநிதி நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் காதல் கலந்த காமெடி படமாக இருக்கும். இப்பொழுது உருவாகி வரும் நிமிர் படத்தில் உதயநிதி கிராமத்து பாணியில் களமிறங்கி ரசிகர்களை மிரளவைக்கும் அதிகளவு அதிரடி சண்டை காட்சியில் ஈடுபட்டிருக்கிறார். வழக்கம் போல் இவரது படத்தில் இடம் பெரும் காதல், காமெடி போன்றவை இந்த படத்திலும் பேசப்படும் அளவிற்கு உருவாகியிருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை ( 26.1.18) வெளிவர உள்ள இப்படத்தில் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை முன்னதாகவே வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வெகுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற 'எப்போதும் உன்மேல் நியாபகம்' என்ற பாடல் டீசர் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.        

நிமிர் படத்தின் எப்போதும் உன்மேல் நியாபகம் பாடல் டீசர்