விஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்

       பதிவு : Nov 09, 2017 19:09 IST    
விஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்

புதியதாக தயாரிக்கப்பட்ட பொருள் சந்தைக்கு வருகிறதென்றால் அதனை பற்றி விளம்பரப்படுத்துவது வழக்கம். இந்த வழக்கம் தற்போது வரை இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு விளம்பரத்தை ரகசியமாகவே வைத்திருக்கின்றனர். இந்த விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர் மட்டுமல்ல இவருடன் மிமிக்ரி சேது, விவேக் பிரசன்னா, லிங்கா, ‘மாரி’ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த விளம்பரம் சமீப காலமாகவே ரகசியமாக வைத்திருக்கின்றனர். இந்த ரகசியம் அந்த பொருளுக்காக அல்ல, விஜய் சேதுபதி விளம்பரத்திலா அப்படி யாருடைய விளம்பரம் என்று ஆவலை தூண்டத்தான் தான். 

இந்த விளம்பரம், ஒரு மன்னர் காலத்து தர்பார் போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இது என்ன மாதிரியான விளம்பரமாக இருக்கும் என்று சிலரிடம் விசாரித்தபோது, பிரபல சேமியா கம்பெனி ஒன்று புதிதாக ஆர்கானிக் உணவுப் பொருள்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதற்காகவே விஜய் சேதுபதி நடிப்பில் விளம்பரம் தயாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தீபாவளிக்கு முன்னரே இந்த சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டு, தீபாவளியன்று அந்த சஸ்பென்ஸை உடைக்கலாம் எனத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நினைத்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் அதில் காலதாமதம் ஏற்பட்டு தற்போதுதான், சஸ்பென்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

 


விஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் இருக்கும் ரகசியம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்