ads

அன்புசெழியனுக்கு ஆதரவு - இயக்குனர் சீனுராமசாமி

seenu ramasamy supports financiar

seenu ramasamy supports financiar

நடிகர், இயக்குனர் சசிகுமாரின் மைத்துனர் ( அத்தை மகன் ) அசோக் குமார். இவர் கந்துவட்டி கொடுமையினால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்கு சினிமா பைனான்சியர் அன்புசெழியன் தான் காரணம் என்றும் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சினிமா துறையினருக்கு அதிர்ச்சியையும், மன வேதனையும் அளித்திருந்தது.      

இதன் காரணத்தினால் சினிமா துறையினர் அன்புசெழியன் மீது பல எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி கந்துவட்டி தொழிலதிபர் அன்புசெழியனுக்கு ஆதரவினை அளிக்கும் வகையில் அவரது ட்விட்டரில் 'எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே...'என்று பதிவு செய்துள்ளார்.     

அன்புசெழியனுக்கு ஆதரவு - இயக்குனர் சீனுராமசாமி