காதலர் தினத்தில் மோதும் சிம்பு சிவகார்த்திகேயன்

       பதிவு : Feb 08, 2018 14:33 IST    
simbu sivakarthikeyan movies release on valentines day 2018 simbu sivakarthikeyan movies release on valentines day 2018

உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாட உள்ளனர். இந்த காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது. இதில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் மலையாள நடிகையான மஞ்சிமா மோகன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்புவிற்கு இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற 'தள்ளி போகாதே' பாடல் தற்போது வரை 27.8 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இசைப்புயல் இசையமைத்த இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி உள்ளார். தற்போது இந்த படம் காதலர் தினத்தன்று திரையரங்குகளில் மீண்டும் ரசிகர்களுக்காக வெளியிட உள்ளனர்.

 

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ரெமோ' படமும் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ரஜினி முருகன்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பக்க பலமாக இருந்தது. காதலை மையப்படுத்தி உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காதலர் தினத்தில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


காதலர் தினத்தில் மோதும் சிம்பு சிவகார்த்திகேயன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்