ads

எஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்

sj suryah priya bhavani shankar new film shooting starts

sj suryah priya bhavani shankar new film shooting starts

கடந்த 2016ம் ஆண்டில் அட்ட கத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஒரு புது படத்தை இயக்கவிருப்பதாக முன்னதாகவே தகவல் வெளிவந்திருந்தது. மேலும் இப்படத்தின் நாயகனாக இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்ஜே. சூர்யா இணைந்திருப்பதாகவும் தகவலில் வெளியானது.

நெல்சன் இயக்கவுள்ள இப்படத்தினை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில்  எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். இந்த நிறுவனம் நயன்தாராவின் திகில் படமான 'மாயா', சந்தீப் கிஷனின் அதிரடி படமான 'மாநகரம்' போன்ற வெற்றி படங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (31.1.18) துவங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் எஸ்ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக 'மேயதா மான்' புகழ் பிரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இவர்களின் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இப்படத்தின் டைட்டில், இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கவிஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்ஜே சூர்யாவின் புது பட படப்பிடிப்பு ஆரம்பம்