ads

ஸ்கெட்ச் டீமிற்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்

rajinkanth best wishes from sketch team

rajinkanth best wishes from sketch team

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் 'ஸ்கெட்ச்'. இந்த படத்தில் தமன்னா விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் முறையாக இணைந்த இந்த ஜோடிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் சேட்டு ஒருவர் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் இணைத்த விக்ரம் தவணை பணம் காட்டாதவர்களிடம் இருந்து வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறார். இவர் ஸ்கெட்ச் போட்டு தூக்கும் பல காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. 

தர லோக்கல் கெட்டப்பில் நடித்துள்ள விக்ரமின் எதிரியாக ஆர்.கே சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார். விக்ரமிற்கும் தமன்னாவிற்கும் காதல் ஒரு பக்கம்  ஓடிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபல தாதா குமாரின் கரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிடுகிறார். இந்த கட்டத்தில் இருந்து துவங்கிய படத்தின் விறுவிறுப்பும் சுவாரிஸ்யமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதோடு  படத்தின் இறுதி 30 நிமிடம் எதிர்பார்ப்பை அதிகபடித்து உள்ளது என்று கூறியதாகவும்  தகவல் வந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் விஜய் சந்தர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  இந்த படம் 3வது வரமாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், வசூல் மற்றும் விமர்சங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.     

ஸ்கெட்ச் டீமிற்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்