ads

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல நானா தானா வீடியோ

sodakku mela naana thaana official video songs release

sodakku mela naana thaana official video songs release

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த  படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடமான வில்லன் கதாபத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் கேங் என்ற தலைப்பில் வெளிவந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ல் வெளியானது.

முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை, வீடியோ பாடல் போன்றவை வெளிவந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பலமாக அதிகரிக்க செய்தது. இந்த படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலில் இடம் பெற்ற 'அதிகார திமிர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது' வரிகளால் இந்த படத்தின் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இந்த படத்திற்கு தடை ஏதும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து பொங்கல் விருந்தாக வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் 'சொடக்கு மேல' மற்றும் 'நானா தானா' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல நானா தானா வீடியோ