த்ரிஷாவின் த்ரில்லர் படமான மோஹினி இசை வெளியீடு

       பதிவு : Jan 11, 2018 09:52 IST    
trishas mohini audio launch trishas mohini audio launch

தனுஷின் 'கொடி' படத்தினை தொடர்ந்து நடிகை த்ரிஷா 'மோகினி', 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை' போன்ற த்ரில்லர் படங்களிலும் '1818',' 96 'மலையாளத்தில் 'ஹேய் ஜுடே' போன்ற பல படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் ரமணா மாதேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'மோகினி'. மார்வெல் ஒர்த் ப்ரொடக்சன் சார்பில் எல் லக்ஷ்மன்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விவேக் மெர்வின் இசையமைப்பாளராகவும் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவாளராகவும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக் வெளியிட்ட ட்ரைலர் த்ரில்லர் அதிகளவு இடம் பெற்றிருந்தது. இந்த ட்ரைலரை 1மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையை கடந்திருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷா இரு வேடங்களில் நடிப்பதாகவும் பழிவாங்கும் உணர்ச்சி அதிகளவு இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது வரை பார்த்திராத அதிரடி த்ரில்லரில் களமிறங்கிய த்ரிஷ்வின் ஜோடியாக பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னணி நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் எதிர்பார்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தருணத்தில் படத்தின் இசை நாளை வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.  

 


த்ரிஷாவின் த்ரில்லர் படமான மோஹினி இசை வெளியீடு


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்