ads

டிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ?..

டிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ?..

டிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ?..

திருவனந்தபுரம் பி.கே ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான பாபு கலையில் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு பிரதமர் மோடிக்கு டிசம்பர் 31-க்குள் மாபெரும் பேரழிவு நேர இருப்பதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 2004-இல் பேரழிவை சுனாமி ஒன்று ஏற்படுத்தியது. பாபு கலையில் என்பவர் 2004-இல் சுனாமி ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அரசாங்கமோ அதை பெரிதாக கவனிக்க வில்லை. சுனாமி நேர்ந்ததற்கு பின்னர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததற்காக பாராட்டு பெற்றார். இவர் தற்போது டிசம்பர் 31-குள் உலகம் ஒரு பேரழிவை சந்திக்க போவதாக தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் உருவாகும் சுனாமி மற்றும் நிலநடுக்கமானது இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, மற்றும் வளைகுடா நாடுகள் உள்பட கிட்டத்தட்ட 11 நாடுகளை தாக்கும். இந்த நிலநடுக்கம் 180 மைட்டி பவர் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை அனைவருக்கும்  சமூக வலைத்தளங்கள் மூலம் பரவ செய்தனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் தற்போது மக்கள் விறுவிறுப்பான சூழ்நிலையில் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் இப்பொழுது கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எளிதில் மேல்புறமே அரியவகை மீன்கள் கிடைக்கிறது. இந்திய கடற்கரை ஓரங்களிலும் கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத மீன்கள் குவிகிறது. இந்த சம்பவங்கள் கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாகவும்  கூறுகின்றனர்.

இந்த கடிதம் இந்தியாவில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தற்போது பாகிஸ்தானில் உள்ள பூகம்ப மறுவாழ்வு மையம் சார்பில் டிசம்பர் 17-இல் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐ உளவு பிரிவின் எச்சரிக்கை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் ஓரிரு நாள் பெய்த கனமழையை சமாளிக்க முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வது என்று சிலர் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் வரப்போகும் அழிவை முன்கூட்டியே தடுக்க அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

டிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ?..