ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ வெளியீடு

 sketch theme new promo vidio release

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் படமான  'துருவநட்சத்திரம்' படத்தினை தொடர்ந்து சீயான் விக்ரம் லோக்கல் கெட்டப்பில் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா இணைந்துள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இந்த  ஜோடியுடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்துவருகின்றனர். இவர்களுடன்  மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்புகள் முவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. மூவிங் ஃபேம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளனர். இந்த படத்தில் தமன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த 'கனவே கனவே - அட்சி புட்சி - சீனி சில்லாளே' என மூன்று சிங்கிள் வீடியோ, டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் 'தீம்' (THEME) என்ற ப்ரோமோ வீடியோவை இன்று வெளியிடுவதாக இசையமைப்பாளர் தமன் அவரது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 15 நொடி ப்ரோமோ வீடியோவில் விக்ரமின் 'வரமாட்டேன்னு நெனச்சியா இல்ல வர முடியாதுனு நெனச்சியா' என்ற வசனம் வலைத்தளத்தில் அதிகளவு வைரலானதினை தொடர்ந்து மற்றொரு ப்ரோமோ வீடியோவை படக்குழு இன்று வெளியிட உள்ளது. இந்த ப்ரோமோ விடியோவின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.      

vikram new promo video release today

ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ வெளியீடு


  Tags : 
 • vikram sketch movie in theme promo video release from today
 • theme promo video release from today
 • theme promo video release
 • sketch theme promo video release
 • sketch movie
 • sketch movie in new promo video release
 • sketch movie in new promo video launch
 • sketch movie updates
 • sketch movie news
 • chiyaan vikram
 • sketch movie in theme new promo video release
 • ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ வெளியீடு
 • ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ இன்று வெளியீடு
 • ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ
 • விக்ரமின் ஸ்கெட்ச் படத்தின் தீம் ப்ரோமோ வீடியோ வெளியீடு
 • ஸ்கெட்ச் படத்தின் தீம் வீடியோ வெளியீடு
 • ஸ்கெட்ச் படத்தின் தீம் வீடியோ ரிலீஸ்
 • ஸ்கெட்ச் படத்தின் புதிய தகவல்