ads

சூர்யா 36 படத்தில் இணையும் சாய் பல்லவி

sai pallavi joined surya 36 movie

sai pallavi joined surya 36 movie

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் மூலம் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்தது. இந்த படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. 

இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் 'ப்ரேமம்' மலர் டீச்சரான 'சாய் பல்லவி' நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குனர் செல்வராகவன் நடிகை சாய்பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதில் அவர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாய்பல்லவி 'நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்றும் அவரிடம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும்' செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சூர்யா 36 படத்தில் இணையும் சாய் பல்லவி