ads

பத்மாவதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் - பிரிட்டன்

british censor board approved padmavati movie

british censor board approved padmavati movie

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்து வந்த பத்மாவதி படத்திற்கு இந்திய அளவிலான எதிர்ப்புகள் வந்திருந்தது. ராஜஸ்தானில் உள்ள சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்து வரும் 'பத்மாவதி' படத்தில் தவறுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக படப்பிடிப்பு பகுதிகளுக்கு சென்று பொருட்களை சேதப்படுத்துவது, தீபிகாவிற்கும், இயக்குனருக்கும் கொலை மிரட்டல் விடுவது, நாயகி படுகோனே தலையை வெட்டி வருபவர்களுக்கு 1 கோடி பணம் தருவது என்று பல ஆக்ரோஷமான எதிப்புகளை படத்தின் மீதும் நாயகியாக நடிக்கும் தீபிகா மீதும் தெரிவித்தனர்.    

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பிரிட்டனில் உள்ள சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. படத்தினை பார்த்த பிரிட்டன் சென்சார் குழுவினர் படத்தினை வெளியிடுவதற்கு அனுமதியை கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு 12ஏ சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் காரணமாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடாது எனவும் 18 வயதை தாண்டிய அடல்ட்ஸ் மட்டும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       

டிசம்பர் 1ம் தேதி வெளியிட இருந்த இப்படம் பல எதிர்ப்புகள் காரணத்தினால் வெளியீட்டு தேதியை மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டனில் தணிக்கை சான்றிதழ் கொடுத்ததினால் டிசம்பர் 1ம் தேதியே பிரிட்டன் நாட்டில் மட்டும் வெளியிடலாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இந்திய நாட்டில் முதலில் வெளியிட்ட பிறகு பிற நாடுகளில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்..

பத்மாவதி படத்திற்கு சென்சார் சான்றிதழ் - பிரிட்டன்