ads

பத்மாவதி பட விவகாரத்தில் தீபிகா படுகோனேவிற்கு ஆதரவு அளித்த பிரபல நடிகை

raai laxmi supports padmavati movie

raai laxmi supports padmavati movie

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தற்பொழுது ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக கொண்டு 'பத்மாவதி' படத்தினை  இயக்கிவருகிறார். இதில் பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இந்த படத்தில் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாக பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனர்.   

இந்நிலையில் சில பிரபலங்கள் படத்திற்கும், நாயகி தீபிகா படுகோனேக்கும் ஆதரவுகள் அளித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகை ராய் லட்சுமி படத்திற்கு எதிப்பு தெரிவிப்பவர்கள் மீது கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். ஒரு நடிகை அவர்களுக்கு கொடுத்த பணியை செய்துள்ளார். அதற்காக கொலை மிரட்டல் அளிப்பது தேவையற்ற செயலாகும். படத்தில் எது வேண்டுமானாலும் இடம் பெற்றிருக்கலாம். தவறுதலாக படத்தினை சித்தரிக்கப்பட்டிருந்தால் படத்தின் மீது எதிர்ப்பு காட்டுவது அவர்களின் உரிமை, அதை விட்டு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மீது எதிப்பு காட்டுவது வரம்பிற்கு மீறிய செயல் என்று கூறியுள்ளார்.     

பத்மாவதி பட விவகாரத்தில் தீபிகா படுகோனேவிற்கு ஆதரவு அளித்த பிரபல நடிகை