ads

தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி! அப்போ ஜிஎஸ்டி உண்டா?

prakashraj tweet about padmavati movie

prakashraj tweet about padmavati movie

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பத்மாவதி'. இந்த படத்தில் சித்தூர் ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளதாக ராஜ்புட் சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதனை அடுத்து படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வரும் டிசம்பர் 1-இல் பத்மாவதி படம் வெளியாவதாக படக்குழு தெரிவித்திருந்தது. படத்திற்கு வரும் கடும் எதிர்ப்புகளால் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி 'பத்மாவதி' படத்தின் வெளியீடு தேதியை தள்ளி வைத்துள்ளார். 

இந்த படத்தின் வெளியீடு தேதியை இன்னும் இயக்குனர் அறிவிக்கவில்லை. படம் வெளியானால் கடும் போராட்டங்கள் மற்றும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இராமாயணத்தில் லட்சுமணன் சூர்ப்பனையின் மூக்கை அறுத்து போல தீபிகா படுகோனே மூக்கை அறுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவர்க்கு 1 கோடி பரிசு என்று சத்ரிய மகா சபையும், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலைக்கு தலா 5 கோடி பரிசு என்று அரியானா பா.ஜனதா ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு என்பவரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்களால் தீபிகா படுகோனே பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளார். 

இதனால் அவரது வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் கமல் ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தீபிகா படுகோனேவை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் "பத்மாவதி படத்தின் நடிகை மற்றும் இயக்குனர் தலைக்கு ஒருபுறம் 5 கோடி அறிவிக்கின்றனர், மறுபுறம் 10 கோடி அறிவிக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு எப்படி இவர்களால் இவ்வளவு தொகையை அறிவிக்க முடியும். இருந்தாலும் இதில் ஜிஎஸ்டி உண்டா?" என்று கேலியாக கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி! அப்போ ஜிஎஸ்டி உண்டா?