ads

மிஸ்டர் சந்திரமௌலி செட்டுக்கு விசிட் அடித்த விஷால்

vishal visit the set of mr chandramouli

vishal visit the set of mr chandramouli

இயக்குனர் திரு இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'சந்திரமௌலி'. இப்படத்தின் மூலம் அப்பா, மகன் இருவரும் முதன் முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தருணத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளர் மற்றும் நடிகரான விஷால் படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு சென்று படக்குழுவினரை சந்தித்துள்ளார். மேலும் திட்டமிட்டபடி மிக குறைந்த நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிவடையவிருக்கும் படக்குழுவினரை விஷால் பாராட்டி படத்தின் வரவேற்பிற்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். 

இயக்குனர் திரு கடந்த 2010ம் ஆண்டில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சமர், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களை விஷாலின் நடிப்பில் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து தற்பொழுது இயக்கிவரும் நான்காவது படமான மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சதிஷ், இயக்குனர் மகேந்திரன், சந்தோஷ் பிரதாப் உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளரான அகத்தியன் நடித்து வருகிறார். மேலும் இசையமைக்கும் பணியில் 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இணைந்துள்ளார்.

மிஸ்டர் சந்திரமௌலி செட்டுக்கு விசிட் அடித்த விஷால்

  Tags :  , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,