மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்கு பிரியாவிடை கொடுத்த ரெஜினா

       பதிவு : Feb 09, 2018 11:29 IST    
regina shoot wrap up ucoming movie mr chandramouli regina shoot wrap up ucoming movie mr chandramouli

இயக்குனர் திரு இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மிஸ்டர். சந்திரமௌலி'. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக அப்பா -மகன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பில் ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சதிஷ், இயக்குனர் மகேந்திரன், அகத்தியன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தினை வருகிற ஏப்ரல் 27ம் தேதி திரையிடப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்த நாளுக்கு நாள் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படத்தை படக்குழு வலைதாளத்தின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாயகியாக வளம் வந்த ரெஜினாவின் அனைத்து வித காட்சிகளையும் படமாக்கப்பட்டு விட்டதால் படக்குழு அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மேலும் கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் படக்குழு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 

 

'கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த நாட்களில் வெளியானது. அதில் கார்த்திக்,கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா இவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.        

mr chandramouli shooting wrap up stills mr chandramouli shooting wrap up stills
mr chandramouli shooting wrap up stills 2mr chandramouli shooting wrap up stills 2
mr chandramouli shooting wrap up stills 1mr chandramouli shooting wrap up stills 1

மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்கு பிரியாவிடை கொடுத்த ரெஜினா


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்