ads

மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விக்ரம் வேதா புகழ்

sam cs joined as background music director in mohanlal odiyan movie

sam cs joined as background music director in mohanlal odiyan movie

கடந்த ஆண்டில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' படம் 100வது நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு காரணமாக இருந்தது. சாம் சி எஸ் இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு கிடைத்ததின் மூலம் சாம் சி எஸுக்கு  பல படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் கிடைத்திருந்தது. இதன் மூலம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தற்பொழுது இசை அமைத்து வருகிறார்.      

கடந்த சில நாட்களாக அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கவிருப்பதாக தகவல் வந்திருந்தது. இந்த தகவல் வெறும் வதந்தியே என்று சாம் அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மலையாள முன்னணி நடிகர்களின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடித்து வரும் 'ஓடியன்' படத்தின் பின்னணி இசையில் சாம் சி எஸ் இணைவதாக தகவல் வந்துள்ளது. கேரளாவில் நடைபெற்ற சில உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் மோகன்லால் 30 வயதுடைய இளைஞன் தோற்றத்தை கையாண்டுள்ளார். இதற்கு பல பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து மெலிதான தோற்றத்தில் காட்சியளிக்கும் சில புகைப்படங்கள் கடந்த நாட்களுக்கு முன்பு வலைத்தளத்தில் வெளிவந்து வைரலாக பரவியிருந்தது குறிப்பிட்ட தக்கது.     

ஸ்ரீ குமார் மேனன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 75% முடிவடைந்த இந்நிலையில் படத்தின் பின்னணி இசையில் சாம் சி எஸ்  இணைந்துள்ளார். இப்படத்தில் பின்னணி இசைக்கு அதிகளவு முக்கியத்தும் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.       

sam cs joined as background music director in mohanlal odiyan moviesam cs joined as background music director in mohanlal odiyan movie

மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விக்ரம் வேதா புகழ்