ads

சதுரங்க வேட்டை ரீமேக்கில் 'சத்யா' தெலுங்கு ஹீரோ

sathuranga vettai 2 movie

sathuranga vettai 2 movie

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 2015ல் தமிழ் திரையுலகில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தில் நாயகனாக பிரபல ஒளிப்பாதிவாளர் நட்ராஜ் நடித்திருந்தார். இவருடன் இணைந்து இஷாரா நாயர், பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடித்திருந்தனர். தற்பொழுது இந்த படத்தினை  தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது.   

ரீமேக் செய்யவிருக்கும் இப்படத்தில் சுனில் நாயகனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக  முன்னதாகவே தகவல் வெளிவந்தது. ஆனால் சில காரணத்தினால் சுனில் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக சத்யதேவ் காஞ்சரானா நாயகனாக நடிக்க பேச்சி வார்த்தை நடைபெற்று இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ‘க்ஷணம், தி காஸி அட்டாக்’ போன்ற படங்களில் நடித்திருப்பது குறிப்பிட தக்கது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த ‘க்ஷணம்' படத்தினை தற்பொழுது தமிழில் 'சத்யா' என்ற பெயரில் வெளியிடபட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிபி ராஜ், ரம்யா நம்பியார், வரலட்சுமி சரத்குமார், சதிஷ், ஆத்மா, யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.        

    

சதுரங்க வேட்டை ரீமேக்கில் 'சத்யா' தெலுங்கு ஹீரோ