ஸ்கெட்ச் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு

       பதிவு : Nov 25, 2017 09:40 IST    
sketch movie audio launch sketch movie audio launch

துருவநட்சத்திரம் படத்தினை தொடர்ந்து விக்ரம் நடித்துவரும் படம் ஸ்கெட்ச். விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீ பிரியங்கா, சூரி போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூவி பிரேம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.   

புது வித கெட்டப்பில் களமிறங்கியுள்ள விக்ரம் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருந்து அதிகரித்து உள்ளது. இந்நிலையில் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக வருகிற டிசம்பர் மாதம் இசை வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

 


ஸ்கெட்ச் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்