ads

சர்ச்சையில் சிக்கவிருக்கும் தானா சேர்ந்த கூட்டம்

TSK Movie still

TSK Movie still

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், நந்தா, செந்தில் மற்றும் சில முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் பழைய காலத்து நடிகை போன்றும் நாயகன் சூர்யா மீசையை முறுக்கிய தோற்றத்தில் கிராமத்து பாணியிலும் நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது,  அதில் இடம் பெற்ற சூர்யாவின் வசனம் இணையதளத்தில் உலகளவு ட்ரெண்ட் ஆனது.    

இதன் காரணத்தினால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசரை பார்க்கும் போது அக்க்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த 'ஸ்பெஷல் 26' படத்தின் சாயலாக இருப்பதாகவும், இந்த ஹிந்தி படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கு நடிகர் தியாகராஜன் உரிமையை பெற்றிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் இந்த படம் சர்ச்சையில் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

சர்ச்சையில் சிக்கவிருக்கும் தானா சேர்ந்த கூட்டம்