ads
தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீசர்
வேலுசாமி (Author) Published Date : Jan 02, 2018 23:05 ISTMovie News
நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கில் 'கேங்' என்ற தலைப்பில் வெளியிடவுள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது', 'நானா தானா..', 'பீலா பீலா..' போன்ற பாடல்கள் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் டைட்டில் பாடலின் டீசரை வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியிடுவதாகவும், முழு ஆல்பம் ஜனவரி 3-ஆம் தேதி வெளியிடுவதாகவும் அனிருத் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். அதன்படி தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டைட்டில் பாடல் டீசர் வெளிவந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீசர்
-   Tags : 
thaana serntha kootam movie updates
actor surya
actress keerthi suresh
comedy actor senthil
actor karthik
actress ramya krishnan
thaanaa serndha koottam telugu version gang released on january 12
thaana serntha kootam title song teaser
thaana serntha kootam title song full album
thaana serntha kootam title song release
thaana serntha kootam title song
தானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீசர்
தானா சேர்ந்த கூட்டம் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல்
தானா சேர்ந்த கூட்டம் பீலா பீலா பாடல்
thaana serntha kootam movie
தானா சேர்ந்த கூட்டம் சிங்கில் பாடல் விரைவில்
Related News
ads