ads
டிக் டிக் டிக் டைட்டில் சாங் வெளியீடு
மோகன்ராஜ் (Author) Published Date : Dec 09, 2017 10:39 ISTபொழுதுபோக்கு
ஜெயம் ரவி நடிப்பில் தற்பொழுது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'டிக் டிக் டிக்'. இந்த படத்தினை சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க விண்வெளியை சார்ந்து உருவாகியுள்ளது. இந்தியாவில் முதல் விண்வெளி படம் என்பதினால் ரசிகர்கள், விமர்சனங்கள், திரை பட துறையினர் அனைவராலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உட்பட பலர் நடித்துள்ளார்
இமான் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டிலை மையமாக வைத்து ஒரு பாடலை வெளியிட உள்ளனர். இதன் சிங்கிள் டிராக் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாகவும், டிசம்பர் 11-ஆம் தேதி பாடல் வெளியிடுவதாகவும் படகுழு தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்திற்கான வரவேற்புகளும் அதிகரித்துள்ளது.
 
        								 
                                                    
                                                   