ads

'டிக் டிக் டிக்' படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு

tik tik tik trailer

tik tik tik trailer

'வனமகன்' வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தற்பொழுது நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவில் முதல் விண்வெளியை சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள், விமர்சனகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் திரைபட துறையினரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக் மேன் கதாபாத்திரத்தை கையாண்டதோடு அவரின் மகன் ஆரவ் ஜெயம் ரவி இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.    

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் குடியரசு தின விருந்தாக ஜனவரி 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் டைட்டிலை மையமாக வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. மேலும் இதற்கு முன்னதாகவே வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் 4.5 மில்லயன் பார்வையாளர்களையும், 149 கோடி லைக்ஸ்களையும் பெற்று உலகளவு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை, கோயம்பத்தூர், பாண்டிசேரி போன்ற இடங்களில் படத்தின் ட்ரைலரை பெரிய திரையில் இன்று வெளியிடவிருப்பதாக படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை  வெளியிட்டுள்ளார்.       

'டிக் டிக் டிக்' படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு