ads

'சென்னை 2 சிங்கப்பூர்' தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலிருந்து நீக்கம்

chennai 2 singapore movie in tamil rockers

chennai 2 singapore movie in tamil rockers

கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி மட்டும் 7 தமிழ் படங்கள் வெளியானது. அந்த பட்டியலில் 'சென்னை 2 சிங்கப்பூர்' படமும் ஒன்று. இந்த படத்தை அப்பாஸ் அக்பர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ளது. இந்த படம் வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில இணையதளத்தில் வெளியாகி  உள்ளது. படம் வெளியாவதற்கு குறும் பட்ஜெட் படங்கள் போராட வேண்டியுள்ளது. இதில் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பாதிப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.

திரையரங்குகள் கிடைக்காமல் ரிலீஸ் தேதி தள்ளி வைத்து தள்ளி வைத்து தட்டு தடுமாறி சில திரையரங்குகளில் மட்டுமாவது வாய்ப்பு கிடைக்காதா என்று தவித்து வருகின்றனர். இந்நிலையில் 'சென்னை 2 சிங்கப்பூர்' படம் இணையத்தில் வெளியானதை கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்திற்கு வாய்ப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்து கோரிக்கை முன் வைத்துள்ளார். இயக்குனரின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்த படத்தை நீக்கியுள்ளது. 

chennai 2 singapore in tamilrockerschennai 2 singapore in tamilrockers

'சென்னை 2 சிங்கப்பூர்' தமிழ் ராக்கர்ஸ் இணையத்திலிருந்து நீக்கம்