மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்

       பதிவு : Nov 07, 2017 10:28 IST    
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்

இன்று கமல் ஹாசனின் 63-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர் " மருத்துவ முகாம்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. முகாம்களுக்காக அரசியலை பயன்படுத்திக்கொள்வோம். முடிந்த வரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். தேங்கியுள்ள மழைநீரை அரசு அகற்றி வருகிறது. இந்த மழைநீரால் தோற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படும். மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய கனவுகள் படிப்படியாக நிறைவேற்றி வருவேன். எங்கள் முயற்சிகள் வலுப்பெறும். காணும் கனவை நிஜமாக மாற்ற நாங்கள் பாடுபடுவோம்" என்றார். இந்த நிகழ்ச்சியில் அவரது மகள் அக்சரா ஹாசன் பங்கேற்றார்.

 

மேலும் எனது பிறந்த நாளை கொண்டாடப்படுவதை தவிர்த்து கால்வாய்களை வெட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய தினத்தில் அவரின் அரசியல் பிரவேசத்திற்கு முதற் கட்டமாக மொபைல் ஆப் வெளியிடுவதாக கூறியுள்ளார். 


மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்